காஞ்சிபுரத்தில் புதிய தொழில் நுட்ப பயிற்சி நிலையம் துவக்கம்
முதல்வர் காணொலியில் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஆக.25- காஞ்சிபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொழில் துறையில் திறன்மிகு பணி யாளர்களை உருவாக்கும் விதமாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்களின் குழந்தைகள் படித்திட ஏதுவாக 2025-2026 நிதியாண்டில் புதிய தாக காஞ்சிபுரம் உட்பட 7 அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுயிருந்தார். காஞ்சிபுரம் வட்டம், புத்தேரியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, 33 மாணவர்களுக்கு நடப்பு கல்வி யாண்டிற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார். தொழிற் பிரிவுகள்தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி நுட்பங்கள், மேம்பட்ட சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப வல்லுநர், கணினி உதவி உற்பத்தி திட்டம், தொழில்நுட்ப வல்லுநர் மெக்கட்ரானிக்ஸ், அழகுசாதனவியல், வயர்மேன் ஆறு தொழில் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பிரி வினர் (தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்கள்) அவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் சிறுவேடல் க.செல்வம். மாநகராட்சி மேயர், எம்.மகாலட்சுமி யுவ ராஜ், ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் (பொ) காயத்ரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.