tamilnadu

img

பெரியார் உலகத்திற்கு ரூ.1.70 கோடி; முதல்வர் வழங்கினார்!

பெரியார் உலகத்திற்கு ரூ.1.70 கோடி; முதல்வர் வழங்கினார்!

சென்னை, அக். 18 - திராவிடர் கழகம் சார்பில் அண்மையில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் உருவாகி வரும் ‘பெரியார் உலகம்’  அமைக்கும் பணிக்காக திமுக சார்பில், திமுக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பி னர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், சென்னை பெரியார்  திடலில் சனிக்கிழமை திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி அவர்களிடம் ரூபாய் 1 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் வழங்கினார். இதனை தமது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், “பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளி யில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்”  எனவும் குறிப்பிட்டுள்ளார்.