tamilnadu

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு

சென்னை, ஆக. 31- சென்னையில் டீ, காபி விலை திங்கட்கிழமை (செப்.1) முதல் உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி தேநீர் விலை ரூ.12இல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15இல் இருந்து ரூ. 20 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதுகுறித்து டீ கடை வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், வாடிக்கை யாளர்களுக்கு தரமான டீ மற்றும் காபி வழங்கும் வகையில் தான் அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பால், டீ, காபி தூள், சர்க்கரை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, கூகுள் பே, போன் பே மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் போது அதற்கு வங்கிகள் சேவை வரி வசூலிபபது, போக்குவரத்து செலவு போன்ற வற்றின் காரணமாக விலை உயர்த்தப்படு கிறது என்றனர்.  2022ஆம் ஆண்டு டீ விலை ரூ.10இல் இருந்து ரூ. 12ஆகவும், காபி விலை ரூ.12இல் இருந்து ரூ.15ஆகவும் காபி யின் விலை உயர்த்தப்பட்டது. 3 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது, டீ மற்றும் காபி ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு செப்.1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய விலைப் பட்டியல் சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில்  ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி, டீ, பால், லெமன் டீ ரூ.15. காபி – ரூ.20, ஸ்பெஷல் டீ – ரூ.20, ராகி மால்ட் – ரூ.20, சுக்கு காபி – ரூ.20, பூஸ்ட் – ரூ.25, ஹார்லிக்ஸ் – ரூ.25, கப் டீ – ரூ.45, கப் பால் – ரூ.45, கப் காபி – ரூ.60, கப் ஸ்பெஷல் டீ – ரூ.60, ராகி மால்ட் – ரூ.60, சுக்கு காபி கப் – ரூ.60, பூஸ்ட் கப் ரூ.70, ஹார்லிக்ஸ் கப் – ரூ.70. போன்டா, பஜ்ஜி, சமோசா 15 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.