tamilnadu

img

9 தமிழ் திரைப்படங்களுக்கு தமுஎகச விருதுகள் அறிவிப்பு

9 தமிழ் திரைப்படங்களுக்கு  தமுஎகச விருதுகள் அறிவிப்பு

புதுச்சேரி உலக திரைப்பட விழாவில் 

புதுச்சேரி, ஆக. 9- புதுச்சேரியில் நடை பெறும் உலக திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருதுகள் அறி விக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இரண்டாவது உலகத் திரைப்படத் திரு விழா புதுச்சேரி அலை யன்ஸ் பிரான்சிஸ் திரை யரங்கத்தில் வெள்ளிக் கிழமை (ஆக.9) துவங்கி யது. விழாவிற்கு அலை யன்ஸ் பிரான்சிஸ் தலைவர் நல்லாம் சதீஷ் தலைமை தாங்கினார். புதுச்சேரி திரை இயக்கத்தின் செயலாளர் ஆசிரியர் பச்சையம்மாள் வரவேற்றார். துவக்கம் தேசிய விருதுகளை பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது, “திரைப்படத் தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டு மின்றி, பொதுமக்களும் இங்கு திரையிடப்படும் உலகத் திரைப்படங்களைப் பார்த்த பிறகு உணர்வு களைத் தாங்கிச் செல்வார்  கள். உலக முழுவதும் பல தரப்பட்ட திரைப்படங்கள் இயக்கப்படுகின்றன. திரைப்படங்களைத் தயாரி ப்பவர்கள் இங்கு கூடுவதால் இறுதியில் இதுபோன்ற உலகத் திரைப்பட விழாக்கள் வாயிலாக, திரைப்படங்களின் தரம் உயரும். மேலும் திரைப்படம் என்றால் என்ன என்பது குறித்த புரிதலும், ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற கற்றல் நமக்கு கிடைக்கும்.”என்றார். தலைவர்கள் விழாவில் அலை யன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லாரன்ட் ஜெலிகஸ், இயக்குநர் சிவக்குமார், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, நிர்வாகிகள் லட்சுமி காந்தன், சைதை ஜே, நாடக இயக்குநர் பிரளயன், புதுச்சேரி திரை இயக்க தலைவர் பாலு, பொருளாளர் செல்வம் உள்ளிட்ட திரளான இளம் திரைப்பட இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பங்கேற்று பேசினார். பின்னர் தமுஎகச சார்பில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களை அவர் அறிவித்தார். விருதுகள் அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படங்க ளான விட்னஸ், கடைசி விவசாயி, டாணாக்காரன் ஆகிய மூன்று திரைப்படங்க ளும், 2023 ஆம் ஆண்டு வெளிவந்த கூழாங்கல், கழுவேத்தி மூர்க்கன், பார்க்கிங் ஆகிய மூன்று திரைப்படங்களும், 2024 ஆம் ஆண்டு வெளிவந்த லப்பர் பந்து, ஜமா, வாழை ஆகிய மூன்று திரைப்படங்களும் என மொத்தம் 9 திரைப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று ஆதவன் தீட்சண்யா அறிவித்தார். தமிழ்நாடு திரை இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் தமிழ்மணி கூறுகையில், “மதச்சார் பின்மை, சமத்துவம், சமூக நல்லிணக்கம், சாதி மறுப்பு உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கியதாக இது திரைப்படங்களை மாநில செயற்குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று திரைப் படங்களுக்கு எங்கள் சங்கம் விருதுக்குத் தேர்வு செய்யும். கொரோனா காலத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து இப்போது விருதுக்கான திரைப்படங்களை அறி வித்துள்ளோம்” என்றார். மூன்று நாட்கள் நடை பெறும் திரைப்படத் திரு விழாவில் முதல் திரைப்பட மாக டோரி அண்ட் லோகிதா பெல்ஜியம்- பிரெஞ்சு டிராமா திரைப்படம் திரை யிடப்பட்டது. விழாவில் சர்வதேச அளவில் விருது கள் பெற்ற ஸ்பெயின் திரைப்படமான ஆப்டர்நூன் ஆப் சாலி டியூப் திரைப்பட மும் திரையிட்டு கலந் துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியில் வெளிவந்த சிஸ்டர் மிட்நைட் திரைப் படம் திரையிடப்பட உள்ளது.