tamilnadu

கரூர் துயரம் வீடியோ ஆதாரத்துடன் தமிழக அரசு விளக்கம்!

கரூர் துயரம் வீடியோ ஆதாரத்துடன் தமிழக அரசு விளக்கம்!

சென்னை, செப். 30- கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் பரி தாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத் தியது. மூன்று நாட்களுக்கு பின் மவுனம் கலைத்த விஜய், கரூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விரைவில் உண்மை வெளிவரும் என வீடியோவில் கூறி யிருந்தார். இந்த நிலையில், கரூர் துயரம் நடந்தது எப்படி என்பது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அரசு அதி காரிகள் வீடியோ ஆதாரத் துடன் விளக்கம் அளித்துள் ளனர்.10 ஆயிரம் பேர் வருவார்கள் என த.வெ.க. சார்பில் கடிதம் எழுதியிருந்த னர். முந்தைய கூட்டங்களை வைத்து 20 ஆயிரம் பேர் வருவார்கள் எனக் கணித்து அதற்கேற்ப காவல் துறை பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் என்பது நடை முறை. ஆனால், கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் போடப்பட்டது. கூட்டத் துக்கு 27 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். போலீ சார் இல்லை என்றால் நான் இங்கு வந்திருக்க முடி யாது என விஜய்யே கூறி யுள்ளார். கட்சித் தலைவர் வரும் போது வந்த கூட்டமும், ஏற்கெனவே இருந்த கூட்ட மும் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. பிரசார வாக னத்தை முன்பே நிறுத்தும் படி அறிவுறுத்தல் கூறப்பட்டது. ஆனால், அதனை த.வெ.க. வினர் ஏற்கவில்லை. பிரசா ரத்தில் விஜய் பேசியபோது மின்சாரம் நிறுத்தப்படவில்லை. ஜெனரேட்டர் ரூமுக்குள் அதிகம் பேர் புகுந்ததால் அங்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மக்கள் காலையில் இருந்தே காத்தி ருந்ததால் சோர்வடைந் துள்ளனர். தண்ணீர் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.  ஐந்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர். சிலர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்து கூட்டத்திற்குள் முதலில் வந்தது த.வெ.க. ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் தான் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆட்சியரின் ஒப்புதலோடு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனையை தாமதப்படுத்தி இருந்தால் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டி ருக்கும். கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.