தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பறிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி காட்பாடியில் உள்ள தலைமை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வேலூர் திட்டக்கிளை தலைவர் வி.காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திட்டக்கிளை செயலாளர் எம்.சின்னதுரை , தவிச முன்னாள் மாநில செயலாளர் எஸ்.தயாநிதி, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வேலூர் திட்டக்கிளை துணைத்தலைவர் கோ.தருமன், திட்டக்கிளை நிர்வாகிகள் டி.ஜெகன், இ.வெங்கடேசன், எஸ்.இன்பநாதன், பொருளாளர் ஆர்.முரளிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர்.