தாம்பரம் மாநகராட்சி புலிக்கொரடு கிராமம், திருநீர்மலை சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்ற வியாழனன்று (செப்.11) வனச்சரகர் முயற்சித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக செயல்படும் வனச்சரகரை கண்டித்து கிளைச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் கொடிக்கம்பம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாம்பரம் பகுதி செயலாளர் தா. கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
