tamilnadu

ஹவாலா பணம் கொடுக்கல் வாங்கலில் கடை ஊழியர் கடத்தல்

ஹவாலா பணம் கொடுக்கல் வாங்கலில் கடை ஊழியர் கடத்தல்

ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

சென்னை, ஜூலை 14- சென்னையில் ஞாயிற்றுக் கிழமை ஹவாலா பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடை ஊழியரை கடத்தி சென்ற ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேரை 2 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீக மாக கொண்டவர் சுமித் சிங். இவர்  சென்னை அண்ணாசாலை அருகே  ரிச்சி தெருவில் செல்போன் சர்வீஸ்  கடை நடத்தி வருகிறார். அதே போல், ஹவாலா பண பரிமாற்றத் திலும் ஈடுபட்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிறன்று சுமித் சிங் கடத்தப்பட்ட தாக அவரது தந்தை, உறவினரின்  மூலம் சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார்  செய்தார். மேலும், தனது மகன் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் வரைபடத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அதனடிப்படையில் விசாரித்த போது, அண்ணா நகரில் ஜிஎஸ்டி  அதிகாரிகள் குடியிருப்பு வீட்டில்  சுமித் சிங் அடைத்து வைக்கப் பட்டிருப்பது காவல்துறை யினருக்கு தெரியவந்தது. உடனே காவல் துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமித் சிங்கை மீட்டனர். இந்த கடத்தலில் ஈடு பட்ட 3 பேரையும் 2 மணி நேரத்தில்  கைது செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரித்த னர். அவர்கள் ஜிஎஸ்டி அலுவல கத்தில் வேலை பார்க்கும் சுரேந்தர்,  வங்கி மேலாளர் நவீன்குமார் மற்றும்  தனியார் நிறுவன ஊழியர் சரத் என்பது தெரியவந்தது. அவர் களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி காவல் துறையினர் கூறுகையில், கடந்த சில மாதங் களுக்கு முன்பு ஒரு தனியார் வங்கி யில் சுமித் சிங், கணக்கு தொடங்கி யுள்ளார். பின்னர் பணத்தை அவரது  கணக்கில் செலுத்த வரும்போது மேலாளராக பணியாற்றிய நவீன் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பின் அடிப்படையில், நான்  கூறும் வங்கி கணக்கில் ரூ.50  லட்சம் செலுத்தினால், 10 நிமிடங் களில் ரூ.52.50 லட்சமாக கிடைக்கும் என்று நவீன்குமாரிடம் சுமித் சிங் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதுபற்றி நவீன்குமார், அவரது நண்பர் சரத் ஆகியோர், ஜிஎஸ்டி  அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுரேந்தர் மூலம் பங்கு சந்தையில் வேலை பார்க்கும்  சலீம் ஆகியோரிடம் தெரிவித் துள்ளனர். பின்னர் 3 பேரையும் ரூ.50 லட்சத்துடன் சென்னை சவுகார்பேட்டை பெருமாள் தெரு வில் உள்ள ஒரு பொம்மை கடைக்கு  சுமித் சிங் அழைத்து சென்றுள்ளார்.  அங்கு ரூ.52.50 லட்சத்தை காட்டி யுள்ளனர். இதை பார்த்ததும் நவீன் குமார் உள்பட 3 பேரும் சேர்ந்து, சுமித் சிங் தெரிவித்த வங்கி கணக்குக்கு 3 தவணைகளாக ரூ.50 லட்சத்தை அனுப்பியுள்ளனர். எனினும், அப்பணம் குறிப்பிட்ட  வங்கி கணக்குக்கு செல்லவில்லை என அந்த வங்கி கணக்கின் உரி மையாளர் தெரிவித்துள்ளார். இதனால் பொம்மைக் கடைக்காரர் ரூ.52.50 லட்சம் பணத்துடன் கடைக் குள் சென்றுள்ளார். மேலும், அவர்  எனக்கு உறுதி தகவல் கிடைத்த பிறகுதான் இப்பணத்தை உங்களுக்கு தரமுடியும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதில் ரூ.50 லட்சத்தை கொடுத்து ஏமாந்த நவீன்குமார், சுரேந்தர், சரத் ஆகிய 3 பேரும் பணம் கொடுக்கல், வாங்கலில் உறுதுணையாக இருந்த சுமித் சிங்கிடம் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுமித் சிங்கை காரில் அண்ணா நகருக்கு கடத்தி சென்றுள்ளனர். அங்குள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள் குடியிருப்பு வீட்டில் அடைத்து வைத்து, சுமித் சிங்கிடம் பணத்தை திருப்பி கேட்டு  மிரட்டியுள்ளனர். இதுபற்றி வங்கி கணக்கு வைத்திருப்பவர் சரியான பதில் கிடைக்காததால், சுமித் சிங்கின் தந்தைக்கு போன் செய்து, அவரி டம் மகனை கடத்தி வைத்திருப்ப தாகவும் அவரை மீட்க ரூ.50  லட்சம் தர வேண்டும் என்று 3 பேரும் போனில் மிரட்டலாக பேசி யுள்ளனர். இதுகுறித்து யானை கவுனி காவல் நிலையத்தில் தனது உறவினர் மூலம் சுமித் சிங்கின் தந்தை புகார் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஹவாலா பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடு பட்ட சுமித் சிங், பொம்மை கடைக் காரர் உட்பட சிலரிடம் காவல் துறை யினர் விசாரித்தனர். புகாரின் பேரில் யானைகவுனி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, வங்கி மேலாளர் உள்பட 3 பேரை யும் கைது செய்தனர். பின்னர் 3  பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக வழக்கறி ஞர் ஒருவரையும் காவல் துறையி னர் தேடி வருகின்றனர்.