tamilnadu

img

மழைநீர் கால்வாயால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

மழைநீர் கால்வாயால் சாலைகளில்  பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

பணிகளை முறையாக செய்யவில்லை: கவுன்சிலர் புகார்

சென்னை, ஜூலை 11 - சென்னை மாநகராட்சி 123 வது வட்டத்தின் ஒருபகுதி தேனாம்பேட்டை யில் உள்ளது.  மழைக்காலங்களில் எல்டாம்ஸ் சாலை, திருவள்ளுவர் சாலை, கவிஞர் பாரதிதாசன் (கே.பி.தாசன்)சாலை பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்கும். இந்த பகுதியில் இருந்த மழை நீர்க் கால்வாய் தூர்ந்து விட்டதால், புதிய மழைநீர் கால்வாய் அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் எம்.சரஸ்வதி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து எல்டாம்ஸ் சாலை ஜெகந்நாத தோட்டம் தொடங்கி, திரு வள்ளுவர் சாலை வழியாக கே.பி.தாசன் சாலை சந்திப்பு வரை ரூ.1.30 கோடி  மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் எல்டாம்ஸ் சாலை ஜெகந்நாத தோட்டம் தொடங்கி திருவள்ளுவர் சாலை சந்திப்பு வரை  மட்டுமே மழைநீர் கால்வாய் அமைக் கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் வரும் மழைநீர் வெளியேற இணைப்பு வழங்கப்பட வில்லை. கால்வாய் பணியின்போது துண்டிக்கப்பட்ட கழிவுநீர் கால் வாய்க்கு மீண்டும் இணைப்பு தர வில்லை. இதனால் மழைநீர் கால்வா யில் கழிவுநீரும் கலந்து எல்டாம்ஸ் சாலை - திருவள்ளுவர் சாலை சந்திப் பில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளிக்கு அருகே, உயர்நிலைப்பள்ளி வாயிலிருந்து வெளியேறுகிறது. இதனால் மாணவர்கள், வியாபாரி கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் பெரும் துயரத்திற்கு உள்ளாகி உள்ள னர். கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்ய அதிகாரிகளுக்கு, வார்டு கவுன் சிலர் பலமுறை அறிவுறுத்தியும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே,  கவுன்சிலர் தலைமையில் சிபிஎம் கட்சி யினர் போராட்டம் நடத்த வெள்ளி யன்று (ஜூலை 11) முற்பட்டனர். அதன் பிறகு மழைநீர் கால்வாயை தற்காலி கமாக பாதாள சாக்கடையில் இணை ப்பதற்கான பணியை அதிகாரிகள் தொடங்கினர். இதுகுறித்து கவுன்சிலர் எம்.சரஸ்வதி கூறுகையில், “எல்டாம்ஸ் சாலை ஜெகந்நாத தோட்டத்திலிருந்து - திருவள்ளுவர் சாலை சந்திப்பு வரை இருந்த பழைய மழைநீர் கால்வாயை தூர்வாரி, ஓரடிக்கு உயர்த்தி விட்டு, புதிய கால்வாய் அமைத்தாக கூறு கின்றனர். இதை ஏற்கமுடியாது. எனவே, மாநகராட்சி திட்டமிட்டபடி புதிததாக, முழுமையாக மழைநீர் கால்வாயை அமைக்க வேண்டும். மேலும், எல்டாம்ஸ் சாலை-திரு வள்ளுவர் சாலை சந்திப்பிலிருந்து டிடிகே சாலை சந்திப்பு வரையிலும் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். அப்போதுதான் மழைநீர் தேங்குவதை தடுக்க முடியும். நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் பணிகள் அதிவேகமாக நடைபெறுகிறது. உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதி யில் பணிகள் மெத்தனமாக நடக்கி றது. தேனாம்பேட்டை பகுதியை புறக் கணிக்காமல் மேம்படுத்த வேண்டும்” என்றார்.