கோப்புகளை தாமதப்படும் அரசு அதிகாரிகளுக்கு ரூ.250 அபராதம்
புதுச்சேரி பேரவையில் மசோதா நிறைவேற்றம்
புதுச்சேரி, செப்.18- காரணமின்றி கோப்புகள் தேக்கி வைத்திருக்கும் அரசு அதி காரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கும் சட்ட மசோதா புதுச்சேரி சட்டப்பேரவை நிறை வேற்றியுள்ளது. புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6 வது பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடை பெற்றது. 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்டத்தை கூட்டவேண்டும் என்ற விதியின் கீழ் வியாழக்கிழமை (செப்.18) காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வி.எஸ்.அச்சுதானந்தன் அண்மையில் மறைந்த போப் பிரான்சிஸ், சிபிஎம் முதுபெரும் தலைவர், கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், புதுவை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிவலோகநாதன், ஆளுநர் இல.கணேசன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவைத் தலைவர் செல்வம் இரங்கல் குறிப்பு வாசித்தார். அதைத்தொடர்ந்து. உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர்,பேரவை முன் தாக்கல் செய்ய வேண்டிய ஏடுகளை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ய முற்பட்டார். அப்போது, குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “சுகாதாரமற்ற குடிநீர் விநி யோகத்தால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மூன்று மாத காலமாக ரேசன் அரிசி வழங்கப்படவில்லை. இது குறித்து பேசுவதற்கு கூடுதல் நாட்கள் பேரவையை நடத்த வேண்டும்”என்றார். தர்ணா-வெளியேற்றம் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க் கட்சித் தலைவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அப்போது, குறைந்த பட்சம் 10 நாட்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றனர். இதற்கு விளக்கம் அளித்த பேரவைத் தலைவர், “முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுப்பதாக தெரி வித்தார். கூட்டத் தொடர் நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட வலி யுறுத்திய திமுக, காங்கிரஸ் உறுப்பி னர்கள் பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பிறகு, தர்ணா செய்த உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக பேரவையிலிருந்து வெளியேற்றும்படி சபைக் காவலர்க ளுக்கு பேரவைத் தலைவர் உத்தர விட்டார் இதையடுத்து, சபை காவலர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக உறுப்பினர்கள் நாஜிம், கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியாகராஜன், காங்கிரஸ் உறுப்பி னர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேச்சை உறுப்பினர் நேரு ஆகியோரை பேரவையிலிருந்து வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் மைய மண்டபம் நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையே பேரவை நடவடிக்கைகள் 45 நிமி டங்களில் நடைபெற்றது. பின்னர், காலவரையின்றி ஒத்தி வைக்கப் பட்டது.