ஆர்எம்டி சிறப்பு மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் திறப்பு
சென்னை, செப். 10 சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆர்எம்டி சிறப்பு மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் பன்நோக்கு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா புதனன்று (செப்,10) நடைபெற்றது. இந்த மருத்துவமனை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 3 இடங்களில் 100 படுக்கை வசதிகளுடன், இதுவரை 90 ஆயிரம் முதியோர் உட்பட 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது. புதிய மருத்துவமனையை ஆர்எம்டி மருத்துவமனை குழுமத் தலைவர் டாக்டர் ரிபப்ளிகா ஸ்ரீதர் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள், மருத்துவர்கள், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர். மருத்துவமனையை திறந்து வைத்து டாக்டர் ரிபப்ளிகா ஸ்ரீதர் பேசுகையில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைகளை மக்களுக்கு கொண்டுவர வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த மருத்துவமனை நவீன முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது என்றார்.