tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

தமிழக உள்ளாட்சிகளில்  மாற்றுத்திறனாளிகள் நியமனம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டுகோள் '

சென்னை,  ஜூலை 10 “தமிழக உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நியமிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றி, தற்போது விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  மாற்றுத் திறனாளிகளின் சமூக உரிமைகள், அரசியல் பங்கேற்பு, மற்றும் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரத்தில் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பி, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மாற்றுத் திறனாளிகளுக்கு, அமர் சேவா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கான தகுதிகளாக 40% மற்றும் அதற்கு மேல் மாற்றுத் திறன் உள்ளதற்கான மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை ஆகியவை இருக்க வேண்டும். மேலும், 21 வயது நிரம்பியவராக இருத்தல் அவசியம். விண்ணப்பதாரரின் பெயர் அதே உள்ளாட்சி வட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு குற்றவியல் தண்டனையும் பெற்றிருக்கக் கூடாது என்பன போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. 

மூர் மார்க்கெட் அருகே சுகாதார சீர்கேடு

சென்னை, ஜூலை 10- சென்னையில் மூர் மார்க்கெட் அருகே வரும் மக்கள் துர்நாற்றத்தால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூர் மார்க்கெட் அருகே ரிப்பன் மாளிகை சுற்றுச்சுவர் ஓரமாக சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு திறந்த வெளியில் கழிப்பிடமாகவே மாறிவிட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணி கள் மற்றும் மூர் மார்க்கெட்டிற்கு வருப வர்கள் இங்கு வரும் மிகவும் அவதி அடை கிறார்கள். மேலும், மது பாட்டில்களும் சென்னை பெருநகர மாநகராட்சி தலை மையகம் அருகே வீசப்படுகின்றன. தினமும் சுமார் 4 லட்சம் பேர் சென்ட்ரல் சதுக்கம், ரயில் நிலையம், மெட்ரோ மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு வந்து செல்கின்றனர். அவர்களில் பலர் அந்த பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தை பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் ரிப்பன் மாளிகைக்கும் மூர் மார்க்கெட்டிற்கும் இடைப்பட்ட பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், அந்த இடத்தை சிலர் பயன்படுத்துகின்றனர். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும், சென்னை இன்னும் திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத நகரமாக ஒன்றிய அரசின் நகர்ப்புற அமைச்சகத்தால் அறி விக்கப்பட்டுள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 தரவரிசையில் சென்னையின் இடம் 446 நகரங்களில் 199 ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் மோசமான சுகாதாரம் தான். சென்னையின் தூய்மைக்கு சவால் விடுக்கும் விதமாக உள்ளது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

போதைப்பொருள் விற்ற மருத்துவர் கைது

சென்னை, ஜூலை 10- சென்னை அரும்பாக்க த்தில் மெத்தாம் பேட்ட மைன் போதைப் பொருள் விற்பனை செய்த தாக மருத்துவர் கைது செய்யப்பட்டார். அரும்பாக்கம் பகுதியில் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள்  விற்ற தாக கடந்த 30ஆம் தேதி அந்தோனி, தீபக்ராஜ் உள்ளிட்ட 5 பேர் அடுத்த டுத்து கைது செய்யப்பட்ட னர். அவர்களிடம் போதைப் பொருள் தடுப்பு நுண்ண றிவுப் பிரிவு காவல் துறை யினரும், அரும்பாக்கம் காவல் துறையினரும்  நடத்திய விசாரணையில், மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் விருகம் பாக்கம் சின்மையா நகரைச் சேர்ந்த மருத்துவர் ஈஸ்வர் (27) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை வியாழக்கிழமை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பழமை வாய்ந்த ஆலமரம் மறுநடவு ஆர்.கே.பேட்டை, ஜூலை 10- ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருத்தணி கோபாலபுரம் ஊராட்சியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, திருத்தணி – சித்தூர் சாலையில் சாலை விரிவாக்கப் பணியின்போது, சாலை யோரத்தில் இருந்த நூற்றாண்டு கடந்த ஆலமரத்தை வேரோடு அப்புறப்படுத்தினர். ஆனால் அந்த மரம் மீண்டும் துளிர ஆரம்பித்தது. எனவே பழமை வாய்ந்த இந்த ஆலமரத்தை அங்கிருந்து, சிறிது தூரம் தள்ளி மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது.