கத்திவாக்கம் நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை
குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் கத்திவாக்கம் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர் வடக்கு பகுதிக்குழு சார்பில் எண்ணூர் அனல்மின் நிலையம் குடியிருப்பு அருகே கே.வெங்கடையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, கோயில் நிர்வாகி செல்வம், நிர்வாகிகள் கே.கே.புஷ்பா, சுரேஷ் பாபு, தனலட்சுமி, கிருபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.