tamilnadu

img

இபிஎஸ் 95 பென்சன்தாரர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதி வழங்க கோரிக்கை

இபிஎஸ் 95 பென்சன்தாரர்களுக்கு  சமூக பாதுகாப்பு நிதி வழங்க கோரிக்கை

கடலூர், அக்.13- குறைந்தபட்சம் பென்சன் பெறும் மாநில அரசின் மூத்த குடிமக்க ளுக்கு  சமூக பாதுகாப்பு நிதி வழங்கிட வேண்டும் என்று என்எல்சி இபிஎஸ் 95 பென்சனர் நல சங்கம்   வலியுறுத்தியுள்ளது. அச்சங்கத்தின் நிர்வாகிகள் முருகேசன், ஜனார்த்தனன் உள்ளிடோர் அளித்த மனுவில் இபிஎஸ் 95 உயர் பென்சன் மற்றும் குறைந்தபட்சம் பென்சன் பெறும் மாநில அரசின் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சமூக பாதுகாப்பு நிதி வழங்கிட வேண்டும் என்று  கோரிக்கை விடப் பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இபிஎஸ் பென்சன் தாரர்க ளுக்கு அந்தந்த மாநிலங்க ளின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதிய மும், கூடுதலாக பென்சன் வழங்கப்பட்டு வருகிறது என்று மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழக முதலமைச்சர் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில் கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.