tamilnadu

img

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய பணியை விரைவுபடுத்தக் கோரி ரயில் மறியல் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய பணியை  விரைவுபடுத்தக் கோரி ரயில் மறியல் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு

கடலூர், ஆக. 29- கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலை யத்தை மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு ரயில்வே கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட்  கட்சியின் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக் கிழமை (ஆக.29) நடைபெற்றது. கட லூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்  செல்வன் (விசிக) தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஆர்.அமர்நாத், ஏ.எஸ்.சந்திரசேகரன் (காங்.), எழிலேந்தி (திக), வி.குளோப், வட்ட செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி (சிபிஐ),குமார் (மதிமுக), பாலு (மக்கள் அதிகாரம்),  ரஹிம் (மமக), சுப்பராயன் (மீனவர் பேரவை), ரமேஷ் (விடுதலை வேங்கை), பி.வெங்க டேசன் (குடியிருப்போர் சங்கம்),  விஜய குமார் (ரயில் பயணிகள்), பால்கி (எழுத்தாளர் சங்கம்), ஆர்.ஆளவந்தார் (மாற்றுத்திறனாளிகள்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மந்தமான பணி இந்த கூட்டத்தில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.8 கோடி ரூபாய் செலவில் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கடலூர் திருப்பாப்புலியூர் என ரயில் நிலை யத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும், மயிலாடுதுறை - கோவை ரயில், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும், மன்னார்குடி மஹால், கம்பன், ராமேஸ்வரம், உழவன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.  அடிப்படை வசதிகளை செய்து தருக கடலூர் துறைமுகத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் திருப்பாப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும், கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் மேற்கூரை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும், விழுப்புரம் - தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதையை அமைக்க வேண்டும், கடலூர் துறைமுகம் - பாண்டி - திண்டிவனம் இருப்புப்பாதை திட்டத்தை உருவாக்க வேண்டும். காச்சிகுடா - செங்கல்பட்டு, காக்கிநாடா - செங்கல்பட்டு விரைவு ரயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் செப்டம்பர் 3 அன்று திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.