தோழர் சுதாகர் ரெட்டி படத்திற்கு புதுச்சேரி தலைவர்கள் அஞ்சலி
புதுச்சேரி, ஆக.25- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த சுதாகர் ரெட்டி உருவப்படத்திற்கு புதுச்சேரி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சிபிஐ புதுச்சேரி மாநில குழு அலுவ லகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு மாநில செயலாளர் ஆ.மு.சலீம் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலை வருமான ஆர்.சிவா, சிபிஎம் மாநில செய லாளர் எஸ்.ராமச்சந்திரன், மாநில செயற்கு உறுப்பினர் ராஜாங்கம், விசிக நிர்வாகிகள் தமிழ்மாறன், செல்வனந்தன், சிபிஐ- எம்.எல் நிர்வாகி சோ. பாலசுப்பிரமணியன், மதிமுக சார்பில் இளங்கோ, முன்னாள் அமைச்சர் விசுவநாதன், சிபிஐ நிர்வாகிகள் நாரா. கலைநாதன்,சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் புகழஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.