tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

வியாபாரியை  தாக்கிய ரவுடிகள் அம்பத்தூர்

, செப். 16- சென்னை பாடி கலை வாணர் நகர் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மா.வேல்முருகன் (33). இவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரு கிறார். வேல்முருகனும், தமிழ்மதியும் திங்கட்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பின்னர், கடையை பூட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் வேல்முருகனிடம் ரூ.5 ஆயிரம் மாமூல் தரும்படி கேட்டனர். வேல்முரு கன், தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதைக் கேட்டு ஆத்திர மடைந்த அந்த நபர்கள், கதவை பூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு சங்கிலியால்  அவரை கடுமையாக தாக்கினர்.

புதுச்சேரி அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு  ‘டெட்’தேர்வில் விலக்கு: சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, செப்.16 -  புதுச்சேரி அரசுப்பள்ளி ஆசி ரியர்களுக்கு ‘டெட்’தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: - புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனுபவமிக்க ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதை சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய பாஜக அரசும், மாநில என். ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசும் சேர்ந்து ஆசிரியர் விரோத நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவது கண்ட னத்திற்குரியது. பள்ளிக்கல்விக்கு போதுமான நிதி ஒதுக்காமல் தொடர்ந்து குறைத்து வருவதால் புதுச்சேரி அரசுப்பள்ளிகள் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளன. கடந்த மூன்று மாதமாக கல்வி இயக்குநர் பதவி காலியாக உள்ளது. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் காலி யாக உள்ளன. பள்ளி கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் சிதில மடைந்துள்ளன. நூலகங்கள், ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுக்கு இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே உள்ள மூத்த ஆசிரியர்களிடம், டெட் என்ற போட்டித் தேர்வை கட்டாயப்படுத்துவது ஆசிரியர்களை அவமதிப்பதோடு, கல்வித் துறையின் நிலைப்பாட்டையே சிதைக்கிறது. தங்கள் நீண்ட கால அனுபவம், அரசால் வழங்கப்பட்ட பயிற்சிகள், மாண வர்களுக்கு அளித்த அர்ப்பணிப்பு மூலம் ஏற்கெனவே தங்கள் திறமையை ஆசிரியர்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஆர்டிஇக்கு முன்பு பணியில் சேர்ந்த மூத்த ஆசிரியர்களுக்கு டெட்டில் இருந்து முழுமையான விலக்கு வழங்கப்பட வேண்டும். பணிக்கால அனுபவம், ஆண்டு செயல்திறன் மதிப்பீடு போன்ற வற்றைப் பொறுத்து மாற்று மதிப்பீட்டு முறை கொண்டு வர வேண்டும். கேரளா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஆர்டிஇ- க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்துள்ளன. இதேபோன்று புதுச்சேரி அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை, ஆசிரியர்களுக்கு எந்தவித தண்டனை நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசித்து, நியாயமான தீர்வு உடனடியாக காணப்பட வேண்டும் என அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரி வித்திருக்கிறார்.