ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல்
ராணிப்பேட்டை,ஆக 9- ராணிப்பேட்டை மாவட் டம், வேலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இருந்தும் போதிய வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் கழிவு நீர் சேர்ந்து குடியிருப்புகள் மற்றும் வீதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கும் அவ லம் பல ஆண்டுகளாக உள்ள தாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மழைக் காலங்களில் சேறும் சகதியு மாக நோய்த் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாரிகள் அலட்சிய போக்கை கண்டித்தும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மூர் - சோளிங்கர் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தக வல் அறிந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என உறுதி அளித்த தன் அடிப்படையில் போராட் டம் முடிவுக்கு வந்தது.