இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்புரை உறுதியேற்பு நிகழ்ச்சி
79ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு பகுதிக் குழு சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்புரை உறுதியேற்பு நிகழ்ச்சி பகுதிச் செயலாளர் ஆர்.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் புவியரசி, நிர்வாகிகள் ஆர்.ஸ்டாலின், ஆண்ட்ரூஸ், அருமைராஜ், அம்சா பாய், வி.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.