tamilnadu

img

குடியிருப்புகளை பாதுகாக்கக் கோரி மனு...

பல்லாவரம் தொகுதி, அனகாபுத்தூர் அடையாறு கரையோரம் உள்ள தாய் மூகாம்பிகை நகர், சாந்திநகர், காயிதே மில்லத் நகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற உள்ளனர். குடியிருப்புகளை பாதுகாக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் சாதிக்பாட்ஷா, சுரேஷ், மாரியப்பன் ஆகியோர் மனு அளித்தனர். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் தொகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, கிளைச்செயலாளர் வெங்கட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

;