விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு
விழுப்புரம், ஆக.2- விழுப்புரம் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மண்டல அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகள் ஊழியர்களின் குறைகளை கேட்டறியும் அதிகாரிகளை முதற்கட்டமாக நியமிப்பதாக போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் உறுதியளித்துள்ளார். விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்ட மேலாளரிடம் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் மனு அளித்தனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட மேலாளரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, அரசு போக்குவரத்து மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சங்கத்தின் மண்டல நிர்வாகிகள் எம்.முத்துவேல், செல்வம், கடலூர் மண்டல செயலாளர் ராஜேஷ் உட்பட சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.