tamilnadu

img

தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட்

தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் பணி நியமனங்களை திரும்பப் பெற வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிப்படி அனைவருக்கும் சமூக பாதுகாப்புடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க கோரி வெள்ளியன்று (ஆக.8) ரிப்பன் மாளிகை வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சி பகுதி துணைத்தலைவர் கோமளவல்லி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அண்ணா குபேரன், வடசென்னை மாவட்டத் தலைவர் வி.சிவகுமார், இணைச் செயலாளர்கள் சீனிவாசலு, சுந்தரமூர்த்தி, பகுதி துணைத் தலைவர் எட்வின் ரோஸ் உள்ளிட்டோர் பேசினர்.