கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்ததில் ஒருவர் கைது
கடலூர், அக். 24- கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என கண்டறியும் ஸ்கேனிங் மெஷின் வைத்திருந்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொயணபாடி கிராமத்தில் சின்னசாமி மகன் செந்தில்குமார் என்பவரது வீட்டில் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் மெஷின் மூலம் ஸ்கேன் செய்து பாலினம் கூறுவதாக மாவட்ட மருத்துவக் குழுவிற்குத் தகவல் கிடைத்தது. கடலூர் மாவட்ட இணை இயக்குநர் மணிமேகலை தலைமையிலான மருத்துவ குழு தனிப்படையினர் செந்தில்குமார் வீட்டில் சோதனை செய்தபோது ஸ்கேனிங் மெஷின் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் ஸ்கேனிங் மெஷினைப் பயன்படுத்தி கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என பார்த்தது உறுதியானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு நபர்கள் மீது வேப்பூர் அரசு தலைமை மருத்துவர் அகிலன் கொடுத்த புகாரின் பேரில் சிறுபாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இடைத் தரகராக செயல்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஐந்து பேரைத் தேடி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக சாலை அமைக்கும் பணி சிபிஎம் தலையீட்டால் நிறுத்தம்
வேலூர், அக். 24- வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-இல் 15 வார்டுகள் உள்ளன. இதில் காட்பாடி பகுதி 11-ஆவது வார்டு திருநகரில் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் துவக்கியுள்ளார். ஏற்கெனவே இருந்த பழைய சாலையைத் தோண்டி எடுக்காமல் பழைய சாலை மீதே மீண்டும் சாலை அமைக்கப் பணி செய்து வந்தனர். இதுபோன்று சாலை அமைப்பதால் வீடுகள் சாலைக்கும் கீழே சென்று விடுவ தோடு, மழைக்காலத்தில் மழைநீர் வீடு களுக்குள் செல்லும் நிலை ஏற்படும். தமிழக அரசின் வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்காமல் ஒப்பந்ததாரர் சாலை அமைக்கும் தகவல் அறிந்து, சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளியன், கிளை செயலாளர் ஏ.பழனியப்பன், மூத்த தோழர் ராஜேந்திரன், வழிக்கறிஞர் ஐ.இளங்கோவன் ஆகியோர் சாலை போடுவதைத் தடுத்து நிறுத்தி மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கூறினர். உடனடியாக அங்கு வந்த மாநக ராட்சி உதவி பொறியாளரிடம் அரசு வழி காட்டுதல்படி சாலை அமைக்க வலி யுறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் காட்பாடி பகுதிக்கு உட்பட்ட பல வார்டு களில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் சாலை போடுவதாக சிபிஎம் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனையடுத்து மாநகராட்சி ஆணை யாளரிடம் கலந்தாலோசித்து விட்டு பணி களைத் தொடர்வதாக தெரிவித்து விட்டு, சாலை அமைக்கும் பணியைக் கைவிட்டு இயந்திரங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.