tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு இனி இலவச பஸ் பயணம் இல்லை

சென்னை,மே 23- ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வெள்ளிக்கிழமை (மே 24) நடைபெற உள்ள  பிளே ஆப் 2வது தகுதி சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐ.பி.எல். சீசனின் குவாலிபை யர் -2 மற்றும் இறுதிப்போட்டி வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை  சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத் தில் நடைபெறவுள்ளது. முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் சம்பந்தப்பட்ட போட்டிக்கான நுழைவுச்சீட்டு (டிக்கெட்)  வைத்திருந்தால் அதை காண்பித்து  மாநகர பேருந்துகளில் கட்டணமில்லா மல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டி ருந்தது.

ஆனால் மே 24 மற்றும் 26ஆம் தேதி களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி களுக்கு மாநகர பேருந்துகளில் சலுகை  பயணம் அனுமதியில்லை. எனவே போட்டிக்குச் செல்வோர் பயணச்சீட்டு பெற்று பயணிக்கும்படி மாநகர போக்கு வரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தனியாகச் செல்லும் சிறுமிகளுக்கு
பாலியல் சீண்டல்: பைக் ஆசாமி கைது!

சென்னை,மே 23- மதுரவாயலில், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை குறிவைத்து, இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டல் அளிப்பதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் அடுத்த எம்.எம்.டி.ஏ  காலனி பகுதியில், தனியாக நடந்து சென்ற இரண்டு சிறுமி களுக்கு இருசக்கரவாகனத்தில்  வந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டல் அளித்ததாக புகார் எழுந்ததை அடுத்து, மதுரவாயல் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த வகையில், மதுரவாயல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட  சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, அவற்றை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில், இந்தச் செயலில் ஈடுபட்டது ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த மகேஷ் (22) என்பது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், அவரை கைது செய்த காவல்துறையினர் மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இத்தகைய செயலில் ஈடுபடுவதற்காக, அவர் பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களையும் காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி,  புழல் சிறையில் அடைத்தனர்.

;