மின் ஊழியர் மத்திய அமைப்பின் புதிய கிளை உதயம்
புதிய கிளை உதயம் திருப்பத்தூர், செப்.13- திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு மின் பொறியாளர் அலுவலகம் பகுதியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளை துவக்க விழா திட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் மாநில செய லாளர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் மாநில துணை தலை வர் கோவிந்தராஜ், செயலாளர் ஏங்கல்ஸ், கோட்ட செய லாளர் வெங்கடேசன், திட்ட செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் வெங்கடேசன், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கேசவன், சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் இணை செயலாளர்அசோக்குமார் நன்றி கூறினார். ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் விண்ணப்பங்கள் வரவேற்பு சென்னை,செப்.13- வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025 – 2026ஆம் கல்வி ஆண்டிற்கான பகுதி நேர மாணவ /மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பகுதி நேரப் பயிற்சி வகுப்பின் காலம் 4 ஆண்டுகள்ஆகும். விண்ணப்பங்களைwww.vadapalani andavar.hrce.tn.gov.in, www.hrce.tn.govin ஆகிய இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் 13.10.2025 க்குள் துணை ஆணையர்/செயல் அலுவ லர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை600026 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
