tamilnadu

img

தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி பொறுப்பேற்பு

தென்னிந்திய பகுதிகளுக்கான  புதிய ராணுவ தளபதி பொறுப்பேற்பு

சென்னை, ஜூலை 31- தென்னிந்திய பகுதி களுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி பொறுப்பேற்கிறார்.  ராணுவத்தின் தென்னிந்திய பகுதி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களையும், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களையும் கொண்டதாகும்.   அவர் அமராவதி நகர் சைனிக் பள்ளி, கடக்வாசலா தேசிய பாது காப்பு அகாடமி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாடமி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். 1987 ஜூன் 13 அன்று புதிதாக்க உரு வாக்கப்பட்ட 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டாலி யனில் நியமிக்கப்பட்டார். இப்படைப்பிரிவு பின்னர் ஆகஸ்ட் 1992 இல் பாரா ரெஜிமென்ட்டாக மாற்றப் ட்டது.  லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி ராணு  வத்தின் பல்வேறு படைப்பிரிவுகளிலும், பயிற்றுவிக்கும் அமைப்பு களிலும் இதற்கு முன்பு பணி யாற்றியுள்ளார். நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், வெளிநாட்டில் ஐ.நா. படையிலும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.   சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பாதுகாப்பு மற்றும் வியூகவியல் பட்டம், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பில் முது கலை மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.எல். பட்டம் ஆகிய வற்றை அவர் பெற்றுள்ளார்.