சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் "எதிர்கால மருத்துவம் 2.0" இரண்டாவது பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அரங்குகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மரு.பார்த்தசாரதி, அமெரிக்க மருத்துவ சங்க தலைவர் கபிலன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் உடன் உள்ளனர்.
