தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சேவையை மேம்படுத்த அமைச்சர் உத்தரவு
சென்னை, ஜூலை 17- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தின் சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும் என அமைச்சர் இரா. இராஜேந் திரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட ரங்கில் அமைச்சர் தலைமையில் நடை பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மண்டல மேலா ளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியா ளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் சுற்றுலா தொடர்பாக ஆய்வு செய்ய ப்பட்டன. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர்,“பொறியாளர் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்ட டங்கள் மற்றும் பராமரிப்பு பணிகளின் நிலை குறித்து விசாரித்தார். சிதம்பரம் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி பணிகள், கோயம் புத்தூர் கூட்டரங்கு கட்டட பணிகள், காஞ்சி புரம் ஓட்டல் பராமரிப்பு பணிகள், ராணிப் போட்டை கவேரிபாக்கம் ஏரி கட்டட பரா மரிப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மதுரை, திருச்சி, சென்னை போன்ற மண்டல அலுவலகங்களின் வரவு-செலவு மற்றும் விருந்தினர்களிடம் விருந்தோம்பல் குறித்த தகவல்களை மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் ஆராய்ந்தார். சுற்றுலா தொகுப்பு செயல்திறன் மற்றும் தீவுத்திடல் வரவு செலவு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். முந்தைய ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளின் மீதான நடவடிக்கை குறித்தும் விசாரித்தார். அமைச்சர் மேலும் கூறுகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மிகச் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும். மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவு விடுதிகள், படகு குழாம்கள் மூலம் அதிக லாபம் ஈட்டும் வகையில் செயலாற்ற வேண்டும் என்றார். பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தங்கும் விடுதி அறை களை சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், பொதுமக்களை ஈர்க்கும் வகையான உணவு வகைகளை தயாரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மேலாண்மை இயக்குநர் தா.கிருஸ்துராஜ், பொது மேலாளர் ச.கவிதா, பொறியாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்துகொண்டனர்.