கிண்டி பகுதியில் மெத்தம்பெட்டமைன் : 3 பேர் கைது
சென்னை, அக். 12– கிண்டி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்த னர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலை மையில் போலீசார் கிண்டி, எம்ஆர்சி உட்புற சாலை அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாக னத்தில் வந்த 3 நபர்களை மடக்கி விசாரித்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் வைத்தி ருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உத்திரமூர்த்தி (எ) நந்தா, யோசப், ஆகாஷ் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் போதைப்பொருளை பெங்களூரில் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதேபோல் பூந்தமல்லி சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலை சந்திப்பு அருகில் சோதனை செய்ததில் ஒருவரிடம் 3 கிலோ கஞ்சா மற்றும் ஒரு அட்டையில் 10 மாத்திரைகள் வீதம் 145 அட்டைகளில் இருந்த மொத்தம் 1450 எண்ணிக்கை கொண்ட போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கைப்பற்றி மயிலாப்பூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்த னர். இதைத் தொடர்ந்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத் தனர்.
