குடும்ப வன்முறைகளுக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் மாதர்சங்க திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
திருவள்ளூர், ஜூலை 24- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட 10 வது மாநாடு திருநின்றவூரில் தோழர் மைதிலி சிவ ராமன் நினைவரங்கத்தில் புதனன்று (ஜூலை 23), நடைபெற்றது. இதற்கு மாதர் சங்கத்தின் மாவட்ட தலை வர் இ.மோகனா, மாவட்ட துணைச் செயலா ளர் எஸ்.ரம்யா, மாவட்ட குழு உறுப்பினர் எம்.ரமணி ஆகியோர் தலைமை தாங்கி னார். மாவட்ட குழு உறுப்பினர் கே.ரமா கொடி யேற்றினர். வரவேற்பு குழு தலைவர் ஏ.பச்சையம்மாள் வரவேற்றார்.மாவட்ட குழு உறுப்பினர் என்.கீதா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் ஏ.பத்மா வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொரு ளாளர் பி.சசிகலா வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார்.மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர் பாக்கியம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் டி.மதன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி மாநாட்டை முடித்து வைத்து பேசினார். பகுதி தலைவர் ஏ.செல்வி நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு தலைவராக பி. சசிகலா, மாவட்ட செயலாளராக ஏ.பத்மா, பொருளாளராக எஸ்.ரம்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தீர்மானங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் நிறு வனங்களில் வேலை வாய்ப்பில் பெண்க ளுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும், நூறு நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும், முதலுதவிக்காக மருந்துகள், குழந்தைகளை பாதுகாக்க உதவியாளர் களை நியமிக்க வேண்டும், அரசு பள்ளி களில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், ஒவ்வொரு பாட பிரிவிற்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், திருநின்றவூர் ஏஞ்சல் பள்ளி மற்றும் மருத்துவமனை அருகில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.