tamilnadu

img

சிபிஎம் அலுவலக திறப்பு விழா

சிபிஎம் அலுவலக திறப்பு விழா

கோவை, அக்.7- கோவை, புலியகுளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், புலிய குளம் அலமேலு மங்கம்மாள் லே- அவுட்டில், தோழர்கள் எம்.செல் வமணி, பட்டாணி நடராஜன் நினை வகம் திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, கிழக்கு நகரக் குழு உறுப்பினர் த.நாகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு ஆட்டோ சங்க  மாவட்டப் பொருளாளர் எம்.மைக்கேல்சாமி வரவேற்றார். கோவை நாடாளுமன்ற முன் னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கட்சி  அலுவலகத்தை திறந்து வைத்தார். தோழர்  யு.கே.சிவஞானம் படத்தை சிபிஎம் மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன் திறந்து வைத் தார். மாநிலக்குழு உறுப்பினர் அ.ராதிகா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில், சிபிஎம் மாமன்றக் குழு தலைவர் வி. இராம மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். ஜாகீர், டி.சுதா, கிழக்கு நகரச் செயலாளர் என். சுபாஷ், 63 ஆவது வட்ட செயலாளர் கோ. பாரதி, 64 வட்ட செயலாளர் த.மாரிமுத்து உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.