விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு விழுப்புரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர் . கண்ணப்பன், எஸ்.பிரகாஷ், தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தமிழரசன், மாவட்டக் குழு உறுப்பினர் கோவிந்து, அரசாங்கு மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.