கொளத்தூர், 70 அடி சாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டுவரும் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம் மற்றும் பெரவள்ளூர் காவல் நிலையத்தின் முன்னேற்றப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செவ்வாயன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மேயர் ஆர்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ் ஆகியோர் ஆகியோர் உடனிருந்தனர்.