வாலிபர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட 17 வது மாநாடு வாணாபுரம் பகண்டை கூட்டு ரோட்டில் நடைபெறுகிறது. இம் மாநாட்டையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற வெண் தொண்டர் பேரணியை முன்னாள் மாவட்ட நிர்வாகி டி.ஏழுமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெண் கொடி பதாகைகளை கையில் ஏந்தி வாலிபர்கள் ‘அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி’முழக்கங்கள் எழுப்பியவாறு முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி பகண்டை கூட்ரோடு மும்முனை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் பொதுக் கூட்ட மேடையை அடைந்தது. அங்கு புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவின் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வரவேற்புக் குழு செயலாளர் எம்.உத்திரக்கோட்டிட்டி வரவேற்க மாவட்டத் தலைவர் மு.சிவகுமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் கே.பாரதி,மாநில இணைச் செயலாளர் செல்வராஜ்,மாநில செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன்,மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி,மாவட்ட துணைத் தலைவர் இரா.வெங்கடேசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சதீஷ்குமார், பி.முரளி,ஒன்றிய செயலாளர் இ.விஷ்ணுகுமார், ரிஷிவந்தியம் ஒன்றியப் பொருளாளர் ஜெ. தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றினர்.