ஜூலை 9 அகில இந்திய பொது வேலை நிறுத்த புதுச்சேரி சிறப்பிதழ்
மோடி, என்.ரங்கசாமி அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிப்போம்!
இந்தியத் தொழிலாளி வர்க்க த்தின் முதுகெலும்பை உடைக்கும் நோக்குடன், மோடி அரசு கொண்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், நம் கடின உழைப்பால் வென்றெடுக் கப்பட்ட உரிமைகளை ஒவ்வொன் றாகப் பறிக்கின்றன. இது வெறும் சட்டத் திருத்தங்கள் அல்ல, கோடிக்க ணக்கான தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தைப் பணயம் வைத்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு வழிவகுக்கும் ஒரு சதித் திட்டமாகும் பறிபோகும் உரிமைகள் ஆசியாவிலேயே முதன்முதலில் 8 மணி நேர வேலையை உயிர் கொடுத்து வென்றெடுத்த வீரம் செறிந்த புதுச்சேரி தொழிலாளர் வர்க்கத்தின் 8 மணி நேர வேலை என்ற சட்டப்பூர்வ உரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாம் போரா டிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமை இனி இல்லை. வேலை நேரம் அதிகரிக் கப்படும். இது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்பத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். நிரந்தர வேலை’ இனி கனவு மட்டுமே: ‘நிரந்தர வேலை’ என்ற பாது காப்பு இனி நாட்டின் சட்ட அமைப்பில் இருந்து அகற்றப்படும். அதற்குப் பதி லாக, ‘நிலையான நேர வேலை வாய்ப்பு’ (Fixederm employment) என்ற புதிய முறை அறிமுகப்படுத் தப்படும். இதன் பொருள், நீங்கள் குறிப் பிட்ட காலத்திற்கு மட்டுமே பணியமர்த் தப்படுவீர்கள், அதன் பிறகு உங்கள் வேலைக்கு எந்த உத்தரவாதமும் இருக்காது. சட்டப்பூர்வ உரிமைகள் இல்லாத தொழிலாளர் பெரும்பாலான தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஊழி யர்களுக்கு இனி எந்தச் சட்டப்பூர்வ உரிமைகளும் இருக்காது. இது முத லாளிகள் உங்களை எப்படி வேண்டு மானாலும் நடத்தலாம் என்ற நிலை மைக்கு வழிவகுக்கும். பேரம் பேசும் உரிமை பறிப்பு தொழிலாளர்கள் தங்கள் முதலாளி களுடன் ஊதியம், பணிச்சூழல் போன்ற விஷயங்களில் பேரம் பேசும் உரிமையை இழப்பார்கள். இது உங்களை முதலாளிகளின் தயவில் வாழும் நிலையை உருவாக்கும். தொழிலாளர் நீதிமன்றங்களின் அதிகாரம் குறைப்பு தொழிலாளர் நீதிமன்றங்களின் அதிகாரம் குறைப்பது , அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகரிக்கும். இது தொழிலாளர் நலனைப் பாதுகாக்கும் அமைப்புகளைப் பலவீனப்படுத்தும். நிச்சயமற்ற குறைந்தபட்ச ஊதியம் குறைந்தபட்ச ஊதியம் இனி அர சாங்கத்தின் விருப்பப்படி நிர்ணயிக்கப் படும். அதற்கென எந்தக் குறிப்பிட்ட சூத்திரமும் இருக்காது. இதன் விளை வாக, உங்கள் உழைப்புக்குரிய நியாய மான ஊதியம் மறுக்கப்படும். வேலைநிறுத்தம் செய்ய தடை முதலாளிகளுக்கு வேலை நிறுத்தம், பணிநீக்கம் மற்றும் ஆட் குறைப்பு செய்வது எளிதாகும். அதே சமயம், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது கிட்டத்தட்ட சாத்தி யமற்றதாகிவிடும். உங்கள் உரிமை களுக்காக குரல் கொடுக்கும் கடைசி வாய்ப்பையும் இது பறிக்கும். புதுச்சேரி தொழிலாளர் நலன் முற்றிலும் புறக்கணிப்பு புதுச்சேரி மாநிலத்தில் தொழி லாளர் நலன் முற்றிலும் புறக் கணிக்கப்படுகிறது. அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றிய ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் செய்த வேலைக்கும் பல மாதங்களாக சம்பளம் பாக்கி இருக் கிறது. அரசு துறைகளில் ஒப்பந்த அடி ப்படையில் பணியாற்றிய நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள், சுகாதா ரத்துறை ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியோர் பணியிழந்து இருக்கிறார் கள். அவர்களுக்கு மீண்டும் பணிய மர்த்தும் முயற்சியை அரசு செய்ய வில்லை. இதர அரசு துறைகளில் பணியாற் றிய அரசு ஊழியர்கள் தங்களின் கோரி க்கைகளுக்காக போராடிக் கொண்டி ருக்கிறார்கள். மின் துறையில் பணி யாற்றும் ஆயிரக்கணக்கான ஊழி யர்கள் தனியார் மையத்தை எதிர்த்து போராடுகிறார்கள். அமைப்புசாரா தொழிலாளர் களாகிய கட்டடக்கலை தொழிலாளர் கள், எலெக்ட்ரிசியன்கள், கார்பெண் டர்கள், வணிக நிறுவனங்களில் பணி யாற்றுவோர் வீட்டுபணியாளர்கள், முறைசார் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், தனியார் பேருந்து களில் பணியாற்றும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் சமூக பாதுகாப்பின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதி யங்கள் வழங்கப்படவில்லை. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல இருக்கி றார்கள். தொழிலாளர் நலத்துறை முற்றிலும் முடங்கி இருக்கிறது. புதுச் சேரி ஆளும் என். ஆர்.காங்கிரஸ் - பிஜேபி அரசு தொழிலாளர் விரோத கொள்கைகளை முழுவதுமாக கடை பிடிக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் அறைகூவல் இந்த அபாயகரமான சட்டங்களை எதிர்த்து, மத்திய தொழிற்சங்கங் களும், புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந் துள்ளன. நம் உரிமைகளை நிலை நாட்டவும், நமது எதிர்காலத்தைப் பாது காக்கவும் நாம் அணிதிரள வேண்டிய நேரம் இது. ஜூலை 9 பொது வேலை நிறுத்தம்- கடையடைப்பு போராட் டத்தை முழு அளவில் வெற்றி பெறச் செய்வோம். நமது ஒற்றுமைதான் நமது பலம். இந்த வேலைநிறுத்த பந்த் போராட் டம் புதுச்சேரி தொழிலாளி வர்க்கத் தின் உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துள் ளோம் என்பதை மோடி அரசுக்கும் புதுச்சேரி ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கும் உரக்கச் சொல்லுவோம். எனவே அனைவரும் ஒன்றுபடுவோம்! நமது உரிமைகளுக் காகப் போராடுவோம்.