மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து பேசி தீர்வு காண்க காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
சென்னை, செப். 27- மக்களுக்கு சேவை செய்யும் போக்கு வரத்து தொழிலாளர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அரசுக்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பணப்பலன் களை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள தொழி லாளர்களின் அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனமும், ஓய்வு பெற்றோர் நல அமைப்பும் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 22 மையங்களில் 41ஆவது நாளாக தொடரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரி வித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அயனாவரத்தில் நடைபெறும் போராட்ட களத்திற்கு சென்று காப்பீட்டு ஊழியர்கள் சங்கம் கோட்டம் 2இன் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். தலைவர் கே.மனோகரன் பேசுகையில், போக்குவரத்து தொழிலாளர்கள் கொ ரோனா, பெரு வெள்ளம் காலத்தில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்கள் சேவை யில் ஈடுபட்டு அரசிற்கு பெருமை சேர்த்தனர். தன் வாழ்நாளில் 30, 40 ஆண்டுகள் அரசுக்காகவும், பொதுமக்களுக்காவும் சேவை செய்து ஓய்வு பெறும் காலத்தில் அந்த தொழிலாளர்களை வெறும் கையோடு அனுப்புவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது ஊழியர்களின் கோரிக்கைக் கான போரட்டம் மட்டுமல்ல, இது மக்களுக் கான போராட்டம். ஏனென்றால் ஒன்றிய அரசு அனைத்து பொதுத்துறை நிறு வனங்களையும் தனியார் மயமாக்கி வரு கிறது. அரசு பணிகளில் ஒப்பந்த முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள தோடு, வேலையின்மையும் அதிகரித்து வரு கிறது. போக்குவரத்து துறை பொதுத்துறை யாக இருக்கும் வரைதான் மாணவர்கள், மகளிருக்கான இலவச பயணம் இருக்கும். இடஒதுக்கீடும் அமலாகும். எனவே பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தும் இந்த அரசு மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து தொழி லாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக சங்கத்தின் சார்பில் போராட்ட நிதி 10 ஆயிரம் ரூபாய் நிர்வாகி கள் வழங்க மாநகர போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, சேகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில் பொதுச்செயலாளர் ஆர்.சர்வமங்களா, பொருளாளர் பி.எம்.ரமேஷ், இணைச் செயலாளர்கள் எஸ்.கங்காதரன், ஏ.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
