tamilnadu

img

இந்திய வம்சாவளியினர் உச்சி மாநாடு டிரம்ப் வரிக்கொள்கை குறித்து விவாதம்

இந்திய வம்சாவளியினர் உச்சி மாநாடு  

டிரம்ப் வரிக்கொள்கை குறித்து விவாதம்

புதுச்சேரி, ஆக. 20 - புதுச்சேரியில் நடைபெறும் இந்திய வம்சா வளியினர் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு குறித்து விவா திக்கப்படும் என்று கோபிஓ (ஜி.ஓ.பி.ஐ.ஓ) அமைப்பினர் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், இந்தியா வம்சாவளி மக்களின் உலக அமைப்பின் (கோபிஓ) தலைவர் கணேஷ் குமார் ஆகியோர் செய்தி யாளர்களிடம் தெரி வித்ததாவது: 35 மில்லியன் இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதிப்படுத்தும் உலக அளவில் அமைப்பான கோப்பியோ அமைப்பு சர்வதேச அமைப்பாகும். 1989 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நிறுவப்பட்ட இந்த அமைப்பின் 22 ஆவது உச்சி மாநாடு புதுச்சேரியில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 22 முதல் 24 வரை புதுச்சேரி பழைய துறைமுக வளா கத்தில் நடைபெறும் மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் துணை நிலை ஆளுநர் டாக்டர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகி யோர் பங்கேற்று துவக்கி வைக்கிறார்கள். ஐ.டி., ஜவுளி துறை, ஏற்றுமதி உள்ளிட்ட 12 துறைகளில் உலக அளவில் வணிகத்தை ஈர்க்கும் வகையில் மாநாடு நடைபெறுகிறது. தொழிலை அபிவிருத்தி படுத்துவதற்கும், இளை ஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மாநாட்டு அரங்கில் 100 ஸ்டால்கள் அமைக்கப்  படுகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த தொழில்முனை வோர்கள் இம் மாநாட்டை  பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இந்த மாநாட்டின் மூலம் ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் உடன்பாடுகள் இந்தியாவில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதுஎன்றும்அவர்கள்தெரிவித்தனர். டிரம்ப் அரசின் இந்திய பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிப்பு என்ற நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அமெரிக்க அரசின் இந்த வரிக் கொள்கை இந்தியா போன்ற வளர்முக நாடுக ளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இம் மாநாட்டில் பங்கேற்கும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் முனை வோர் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு குறித்து விவாதிப்பார்கள். முன்ன தாக மாநாடு குறித்த தக வல் கையேட்டை புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் வெளியிட்டார்.