விமான நிலையத்தில் ரூ.2.3 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை, ஆக.19- சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலை யத்துக்கு துபாயில் இருந்து வந்த 3 இலங்கை பயணி களை சோதனை செய்த போது ஆடைகளுக்குள் 2.5 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2.3 கோடி ஆகும். இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கை செல்வதற்கு தயா ராக இருந்த 3 இலங்கை பணி களையும், இதற்கு உடந்தை யாக இருந்த விமான நிலைய ஒப்பந்த ஊழியர் என 4 பேரை யும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.