tamilnadu

img

தமிழ்நாட்டில் அமையும் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!

தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் அமையும் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், நமது அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபு தாபி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க(ஐயுசிஎன்)-க்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வனத்துறை, ஓம்கார் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.