சிபிஎம் மாமன்ற உறுப்பினர் முயற்சியால் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் அகற்றம்
சென்னை, ஆக. 23- சிபிஎம் மாமன்ற உறுப்பினர் முயற்சி யால் குடியிருப்பு பகுதி அருகே கொட்டிய குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது. கொடுங்கையூர் குப்பை கிடங்கை ஒட்டியுள்ள 41ஆவது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மற்றும் எழில் நகர் பக்கிங் கால்வாய் அருகே சில நாட்களாக மாநகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் பா.விமலாவிடம் புகார் அளித்தனர். இதை யடுத்து அந்த இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, அங்கு குப்பைகள் கொட்ட கூடாது என்றும், குப்பைகளை உடனடியாக அகற்றுமாறும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தற்போது குப்பைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. மேலும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.