புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள்
கிருஷ்ணகிரி, ஜூலை 22 - ஓசூர் புத்தக திருவிழாவில் குளோபல் கால்சியம் நிர்வாகம் சார்பில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பி லான புத்தகங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மாக வழங்கப்பட்டது. புத்தகத் திருவிழா தலைவர் பாலசுந்தரம், செயலாளர் சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், துணைத் தலைவர்கள் சிவக்குமார், நீலகண்டன், இணைச் செயலாளர்கள் எழுத்தாளர் மணி மேகலை, முருகேசபாண்டியன், அரிச்சந்திரன் ஆகியோ ரின் முன்னிலையில், ஓசூர் குளோபல் கால்சியம் நிர்வாகத்தின் சிஎஸ்ஆர் நிதி இயக்குனர் சந்திரசேகரன், பொதுமேலாளர் பழனியாண்டி ஆகியோர் 10 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் புத்தகங்கள் வழங்கி னர். ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் நன்றி தெரிவித்தார்.