tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

மரக்கன்றுகள் பெற்றுக்கொள்ளு மாறுவிவசாயிகளுக்கு  வனத்துறை அழைப்பு

காஞ்சிபுரம்,செப்.18- உத்திரமேரூரில் மரக்கன்றுகள் பெற  விவசாயிகளுக்கு வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர் உத்திரமேரூர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, கைத்தண்டலத்தில் வனத்துறையின் நாற்றங்கால் பண்ணை உள்ளது. இந்த நாற்றங்காலில் நிழல் மற்றும் பழம் தரக்கூடிய சுமார் 40 ஆயிரம்  மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இது சம்மந்தமாக, உத்திர மேரூர் வனச்சரக அலுவலர் ராமதாஸ் கூறியதாவது; உத்திரமேரூர் வட்டாரத்தில், விவசாய நிலங்கள், கல்லுாரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் மரங்களை வளர்க்க, ஆண்டுதோறும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் விரும்பினால் அவர்களது நிலங்களில் வனத்துறை சார்பில், தேக்கு, மா, செம்மரம் ஆகிய மரக்கன்றுகள் நட்டு தரப்படும். அதேபோல, பள்ளிகள், கல்லுாரிகள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் நாவல், புளிய மரம், புங்கன் மரம், ஆலமரம் ஆகிய மரக்கன்றுகளும் நட்டு தரப்படும். இதற்கு விண்ணப்பிக்க, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் உத்திரமேரூர் வனச்சரக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, 9597749906, 9159806994 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.