எல்பிபி கால்வாயில் தேங்காய் நார் ஆலைக்கழிவு முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
ஈரோடு, அக். 13- மொடக்குறிச்சி அருகே தேங்காய் நார் ஆலையில் வெளி யாகும் கழிவு நீரை எல்பிபி கால்வாயில் கலந்து விடுவதை கண்டித்து விவசாயிகள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், விளக்கேத்தி ஊராட்சி, உச்சிமேடு அருகே பி.என்.கே பைபர் மற்றும் ஸ்ரீ பாலாஜி காயர் எக்ஸ்போர்ட் என்ற தேங்காய் நார் ஆலை செயல்பட்டு வருகிறது. எல்பிபி கால்வாய் கரையில் அமைந் துள்ள இந்த ஆலையிலிருந்து வெளியாகும் கழிவு நீரினால் நிலத்தடிநீர், மண்வளம் மற்றும் காற்று மாசுபடுவதாக தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் குற் றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று அதி காலை ஆலையின் கழிவு நீரை மோட்டார் வைத்து குழாய் மூலம் கொண்டு சென்று எல்பிபி கால்வாயில் கலப்பதை அரு கிலுள்ள விவசாயி அறிந்தார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் தகவலை தெரிவித்தார். இத னால் விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஆலையை முற்றுகை யிட்டனர். தகவல் அறிந்து பொதுப்பணித்துறை மற்றும் வரு வாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் ஆலை நிர்வாகம் மீது காவல்துறையில் புகார் அளிப்பதாக உறுதி அளித்தனர். மேலும் காயர் ஆலை நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட கால்வாய் கரை நிலத்தை மீட்கவும் உறுதி அளித்த னர். உறுதியளித்தபடி சிவகிரி காவல்நிலையத்தில் பொதுப் பணித்துறை அலுவலர் மூலமாக காயர் ஆலை மீது உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டது. சிவகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.