பூக்களை சாலையோரம் கொட்டிச்சென்ற விவசாயிகள்
தருமபுரி, அக்.14- விலை வீழ்ச்சியால் சாமந்தி பூக்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டி விட்டு சென்ற சம்பவம் வேத னையை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளான தொப்பூர், ஏலகிரி, எமக்ல்நத்தம், ஜருகு, மிட்டாரெட்டி அள்ளி போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சாமந்திப்பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தருமபுரி பூ மார்க்கெட், சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி, ஓசூர் போன்ற ஊர்களுக்கு விற் பனைக்காக எடுத்து செல்கின்றனர். கடந்த வாரங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையால் ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.120க்கு மேல் விற்பனையானது. தற் போது விலை குறைந்துள்ள நிலையில், அறுவடை செய்துள்ள பூக்களை விற்பனைக்கு எடுத்து செல்லும் செலவிற்குகூட ஆகாத நிலையில், சாலையோரம் பூக் களை விவசாயிகள் கொட்டி சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த வாரங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையின் போது, சாமந்திப்பூ கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரை விற் பனையானது. தற்பொழுது கிலோ சாமந்தி ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. பறிப்புக்கூலி மற்றும் விற்பனைக்காக எடுத்து செல்லும் கூலி கூட கிடைக் காததால், சாலையோரத்தில் பூக்களை கொட்டி விட்டு செல்கிறோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.
