tamilnadu

img

அரசு வேளாண் கல்லூரி அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

அரசு வேளாண் கல்லூரி அமைக்க  விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை, ஆக.28 - ராணிப்பேட்டையில் மாதாந்திர விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் வியாழனன்று (ஆக 28) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராணிப்பேட்டை அடுத்த நவலாக் பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். காஞ்சனகிரி மலையை ஏலகிரி மலையைப் போல சுற்றுலா மையமாக்கி கோடை விழா நடத்த வேண்டும். ஆற்காடு சர்வந்தாங்கல் கிராமத்தில் ஆவின் பால் கொள்முதல் நிலையத்திற்கு இடமும், கட்டடம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விவசாய சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எல்சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், ஆற்காடு தாலுகா செயலாளர் ஆர். மோகன்ராஜ், தலைவர் ஏ.எம். சம்பத்பிள்ளை, கன்னிகாபுரம் கிளை செயலாளர் எம். ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.