மின் ஊழியர், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மின் வாரிய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூலை 19) கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தென்சென்னை கிளை - 1 சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. மத்திய அமைப்பின் தலைவர் டி.பண்டாரம்பிள்ளை, செயலாளர் குமார், பொருளாளர் பழனி, ஓய்வூதியர் அமைப்பின் தலைவர் மோகன், செயலாளர் பங்குனியான் உள்ளிட்டோர் பேசினர்.