காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநாடு கோரிக்கை
திருவண்ணாமலை, ஜூலை 12- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் 18வது திருவண்ணாமலை மாவட்ட மாநாடு அவலூர்பேட்டை சாலை தமிழ் மின் நகரில் நடைபெற்றது. மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் கொடியேற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் காங்கேயன் தலைமை தாங்கினார். மேற்கு கோட்ட செயலாளர் பரமசிவம் வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பாலாஜி செயலாளர் அறிக்கையும், பொருளாளர் வெங்கடேசன் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.அருள் செல்வன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மண்டல செயலாளர் ஆர்.சிவராஜ், மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்ட தலைவர் எம்.சந்திரசேகரன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். தீர்மானம் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், 01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடத்தி ஊதிய உயர்வை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், அடையாளம் காணப்பட்ட பகுதி நேர பணியாளர்களை பணி நியம னம் செய்திட வேண்டும்,மொபைல் மூலம் கணக்கீடு செய்ய நெட் வசதியுடன் கருவி மற்றும் சிம் கார்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவராக வி.எம்.வெங்கடேசன், செயலாளராக மு.பாலாஜி, பொருளாளராக பி.சம்பத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர்.