தீக்கதிர் செய்தி எதிரொலி!
அலெக்ஸ் நகர் சிறுப்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்
காஞ்சிபுரம், ஆக.20- குன்றத்தூர் ஒன்றியம், மாங்காடு நக ராட்சிக்குட்பட்ட அலெக்ஸ் நகர் சிறு பாலம் பட்டூர் - சிக்கராயபுரம் விஸ்தரிப்பை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள சிறு பாலம் முற்றிலும் சேதமடைந்து இருந்தது இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அபாயத்துடன் பயணித்து வந்தனர். பட்டூரையும் சிக்கராயபுரம் விஸ்தரிப்பு பகுதியை இணைக்கும் இந்த சாலை. பட்டூர் மாங்காட்டு, கோவூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளுக்கு எளிதில் பயணம் செய்ய பயன்படுத்தி வந்தனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளி யேறும் உபரி நீர் இந்த பாலம் வழியாக மணப்பாக்கம் கால்வாய்க்கு செல்கிறது. இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இப்பாலத்தின் கான்கிரீட் தளங்கள் முழுவதும் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, உள்ளி ருக்கும் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. அதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணித்து வந்தனர். மக்கள் சிரமம் அடைவதை குறித்து சிபிஎம் மாங்காடு நகராட்சி நிர்வாகத்திடம் பழைய பாலத்தின் வழியாக பயணிக்கும் பொது மக்களுக்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்கு முன்பே அதனை இடித்து புதிய பாலம் அமைத்துதர வேண்டும் என தொடர் கோரிக்கை வைத்து வந்ததை அண்மையில் தீக்கதிர் நாளேட்டில் செய்தி வெளியிட்டியிருந்த நிலையில், மாங்காடு நகராட்சி 2024-2025-ம் ஆண்டு பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அலெக்ஸ் நகர் சிறுப்பாலத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக (ஆக.14) வியாழ னன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.