tamilnadu

img

ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: வீட்டுவேலை தொழிலாளர்கள்  மாநாடு கோரிக்கை

ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: வீட்டுவேலை தொழிலாளர்கள்  மாநாடு கோரிக்கை

சென்னை, ஆக. 10 - நலவாரியம் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை 3ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று சென்னை பெருநகர வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் 7ஆம் ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஆக.10) கிண்டியில் நடைபெற்றது. நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதிலிருந்து ஓய்வூதியம் தர வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை விலைவாசி உயர்வுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும், வீட்டுவேலை தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ திட்டத்தை விரிவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் டி.ஏ.லதா தலைமை தாங்கினார். சிஐடியு கொடியை மூத்த உறுப்பினர் பி.வசந்தா ஏற்றினார். துணைச் செயலாளர் எஸ்.விஜயலட்சுமி வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை துணைச் செயலாளர் ஆர்.குமார் வாசித்தார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் எஸ்.விஜயாவும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஆர்.பார்வதியும் சமர்ப்பித்தனர். தையல் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.ஜெயராமன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.சாந்தியும் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் யு.அனில்குமார் நிறைவுரையாற்றினார். எஸ்.மீனாட்சி நன்றி கூறினார். தலைவராக டி.ஏ.லதா, பொதுச் செயலாளராக எஸ்.விஜயா, பொருளாளராக ஆர்.பார்வதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பொறியியல் கலந்தாய்வில்  தற்காலிக ஒதுக்கீடு!

சென்னை, ஆக.10-  பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான 3-ஆவது சுற்று கலந்தாய்வில், 64 ஆயிரத்து 629 மாணவர்களுக்கு கல்லூரிகளில் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அவர்கள் ஆகஸ்ட் 11 அன்று  மாலை 5 மணிக்குள் அதனை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.