அரிதான புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டு வந்த ஐடி ஊழியர் மறுவாழ்வு அளித்த மருத்துவர்கள்
சென்னை, ஆக.19- தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஒரு இளம் நிபுணரை பாதித்திருந்த ‘டெர்மடோஃ பைப்ரோசர்கோமா புரோட்யூபரன்ஸ்’ என்ற அரிதான மற்றும் தீவிர மான தோல்புற்று நோய்க்கு சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்துள்ளனர். இந்த வகை புற்று நோய், தசை மற்றும் எலும்பு உட்பட சுற்றியுள்ள திசுக்க ளுக்கு வேகமாகப் பரவக்கூடியது. இந்நோயா ளிக்கு ஏற்பட்டிருந்த, புற்று நோய் அவரது உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கடுமையாகப் பாதித்து மோசமான நிலைமையை எட்டியிருந்தது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் சிகிச்சையின் மூலம், ஆரோக்கியமான மற்றும் நிலையான திசுக்களால் முழுமையாக மூடப் பட்டுள்ளது. நோய் மீண்டும் வருவதை முன்கூட்டியே கண்டறிய, தொடர் மருத்து வப் பரிசோதனைகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு மற்றும் உச்சந்தலைக்கு சிறப்பான சுகாதார பரா மரிப்பு ஆகியவை இந்நோ யாளிக்கு தேவைப்படும் என்று வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். புற்றுக்கட்டி அகற்றப் பட்ட பிறகு, நோயாளியின் மண்டையோடு மறு சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர், தோல் ஒட்டுகள், திசு மடிப்பு, திசு விரிவாக்கம் பயன்படுத்தி உச்சந்தலை பல கட்டங்களாகச் சரி செய்யப்பட்டது. இறுதிச் சீர மைப்பு சிகிச்சையானது, நோயாளியின் தொடையி லிருந்து எடுக்கப்பட்ட திசுவின் ஒருபகுதியைப் பயன்படுத்தி செய்யப் பட்டது. இந்த செயல் முறையின் போது, நுரை யீரலுக்குப் பரவியிருந்த புற்றுநோய் முடிச்சு ஒன்றும் அகற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.